வாடிக்கையாளர்களை மோசடி செய்த எஸ் வங்கி ராணாகபூரின் 2,203 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை.!

வாடிக்கையாளர்களை மோசடி செய்த எஸ் வங்கி ராணாகபூரின் 2,203 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை.!

Update: 2020-07-10 04:08 GMT

எஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணாகபூர், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சேர்ந்த சிலர் 4,300 கோடி ரூபாய் வாடிக்கையாளர்களின் முதலீட்டு பணம் மற்றும் சேமிப்பு பணத்தை மோசடி செய்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.

ராணா கபூர் தங்கள் வங்கியின் மூலம் தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு தரப்பட்ட பெரிய கடன்களை குறிப்பிட்ட காலத்தில் வசூலிக்காமல் இருப்பதற்காக, அதற்கு கைமாறாக விலை மதிப்புள்ள சொத்துக்களை பரிசுகளாக பெற்றதும், அந்த வாரா கடன்கள் பின்னர் அது செயல்படாத சொத்துகளாக (என்.பி.ஏ) மாறியதாகவும் குறம் சாட்டப்பட்டுள்ளது.

இதை அடுத்து ராணா கபூர் மார்ச் சென்ற மாதம் கைது செய்ய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரும், அவருடைய குடும்பத்தினர் மற்றும் சிலர் தீவிர கண்காணிப்பு வளையத்துள் விசாரிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் ராணா கபூர் மற்றும் பிறரின் சுமார் 2,203 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்து இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் வழங்கப்பட்ட தற்காலிக உத்தரவின் ஒரு பகுதியாக டி.எச்.எஃப்.எல் நிறுவனத்தின் கபில் மற்றும் தீரஜ் வாதவன் சகோதரர்களின் சொத்துக்களும் இணைக்கப்பட்டுள்ளன.

கபூரின் சில வெளிநாட்டு சொத்துக்களும் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் சில சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

https://economictimes.indiatimes.com/industry/banking/finance/banking/ed-attaches-over-rs-2200-crore-assets-of-rana-kapoor-others-in-yes-bank-pmla-case/articlesho 

Similar News