ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய் குமார் மிஸ்ரா நியமனம்!

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முதல் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மத்திய நிதி மந்திரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Update: 2024-05-07 10:38 GMT

ஜி.எஸ்.டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்  முதல் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சஞ்சய் குமார் மிஸ்ரா பதவியேற்றார். அவருக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் ஜிஎஸ்டி சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நிறுவப்பட்ட ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் முழு வீச்சில் செயல்பட தொடங்கியது .இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ஜார்கண்ட் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த மிஸ்ரா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான தேர்தல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டம் 2017 ன் கீழ் ஜிஎஸ்டி ஏடி நிறுவப்பட்டது. இந்த தீர்ப்பாயம் மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி சட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்காக தொடங்கப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலுக்கு பிறகு இந்த தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வை டெல்லியிலும் கிளை அமர்வுகளை நாடு முழுவதும் மொத்தம் 31 இடங்களில் அமைக்கப்பட உள்ளதாகவும் அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜிஎஸ்டி சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதுடன் உயர் நீதிமன்றங்களில் ஜிஎஸ்டி தொடர்பான வழக்கு சுமையை குறைக்கவும் இந்த தீர்ப்பாயம் உதவுகிறது.


SOURCE :Dinaseithi

Similar News