சம்பா சாகுபடிக்காக ரூ.24,420 கோடி உர மானியம்- மத்திய மந்திரி சபை ஒப்புதல்!

சம்பா சாகுபடிக்காக ரூபாய் 24,420 கோடி உரமானியம் வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2024-03-01 04:30 GMT

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு திட்டங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது .இதில் முக்கியமாக வருகிற சம்பா சாகுபடிக்காக பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உங்களுக்கு ரூபாய் 24,420 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. குறிப்பாக 2024-25 ஆம் ஆண்டு சம்பா சாகுபடி காலத்தில் ஊட்டச்சத்து சார்ந்த மாநில தொகை தொடர்பாக மத்திய உரங்கள் துறையின் பரிந்துரையை மத்திய மந்திரி சபை ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக மத்திய மந்திரி அனுராதாக்கூர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான சம்பா சாகுபடி காலத்தில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பர உரங்களுக்கான ஊட்டச்சத்து சார்ந்த மாநிலமாக ரூ.24,420 கோடிக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது .2024 சம்பா பருவ காலத்தில் நைட்ரஜனுக்கான மானியம் கிலோவுக்கு 47.02 ,பாஸ்பரஸ் ரூபாய் 28.72, பொட்டாசியம் ரூபாய் 2.38, கந்தகம் ரூபாய் 1.89 ஆக இருக்கும். இதே போல பாஸ்பரஸ் உரத்துக்கான மானியம் ரூபாய் 20.82ல் இருந்து ரூபாய் 28.72 ஆக அதிகரித்துள்ளது. எனினும் நைட்ரஜன் பொட்டாசியம் கந்தகத்துக்கான மானியம் 2024 ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் மாற்றமில்லை .


இந்த மானியத்துடன் டி.ஏ.பி.யின் மானியமும் வருகிற சம்பா பருவத்தில் அதே விலையில் தொடரும். தற்போது டி.ஏ.பி 50 கிலோ மூட்டை 1,350 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொட்டாசியம் குளோரைடு தொடர்ந்து ரூபாய் 1,670க்கும் என்.பி.கே ருபாய் 1,470க்கும் விற்பனை செய்யப்படும். விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரங்கள் கிடைக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட்ட விலைகளின் படி உர நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும்.


SOURCE :DAILY THANTHI

Similar News