25% லாக்!! பிஎஃப் விதிகளில் புதிதாக வந்திருக்கும் மாற்றம்!!

By :  G Pradeep
Update: 2025-10-18 06:05 GMT

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPFO) சமீபத்தில் பல விதிமுறைகளில் மாற்றங்கள் செய்தது. தற்பொழுது செய்யப்பட்டுள்ள மாற்றங்களில் வேலை இன்மை ஏற்படும் சமயத்தில் PF எடுப்பதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.

 இந்த புதிய விதிமுறைகளின் படி வேலையை இழந்தோர், 12 மாதம் வேலையின்மைக்குப் பிறகு தன்னுடைய முழு வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெற முடியும் என்றும், ஓய்வூதிய செட்டில்மென்ட்க்கு இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டி இருந்த நிலையில் தற்பொழுது மாற்றப்பட்டு கிட்டத்தட்ட 36 மாதங்கள் காத்திருக்க வேண்டும். மேலும் 25% பங்களிப்பு உறுப்பினர்களின் கணக்குகளில் ஓய்வூதியம் பெரும் வரை நிரந்தரமாக லாக் செய்து கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது கட்டாய சேமிப்பு விதி என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

இதுபோன்று விதிமுறைகள் இருந்தால் தேவையற்ற செலவுகளை குறைக்க முடியும் என்றும், பணி ஓய்வுக்குப் பிறகு உள்ள காலகட்டத்தில் இந்த பணம் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அரசின் இந்த முடிவுக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், தொழிலாளர்களின் எதிர்கால இடையூறுகளை தடுப்பதற்காக இந்த விதிமுறைகளை அறிமுகப்படுத்திருப்பதாக கூறப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News