7 நாளில் 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்த பிரதமர் மோடியின் சூரிய மின் திட்டம்!

பிரதமர் மோடியின் சூரிய மின் திட்டத்தில் இணைவதற்காக ஏழு நாளில் 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Update: 2024-02-29 17:00 GMT

பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு சூரியசக்தி இலவச மின் திட்டத்தை அண்மையில் அறிவித்துள்ளார். திட்டத்தில் ஒரு கிலோ வாட் திறனில் சூரிய சக்தி மின்கலம் அமைக்க 30,000 மும், 2 கிலோ வாட் அமைக்க 60 ஆயிரம் ரூபாயும் மானியம் வழங்கப்படும். அதற்கு மேல் அமைத்தால் 78 ஆயிரம் ரூபாய் மானியம். இந்த மானிய தொகை மின் நிலையம் அமைத்து முடித்ததும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.


சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்துவதால் மின்வாரியத்திற்கு செலுத்தும் கட்டணமும் குறையும். தமிழகத்தில் பிரதமர் திட்டத்தில் 25 லட்சம் வீடுகளில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது .அதற்கு ஏற்ப மாதம் 20-ஆம் தேதி முதல் மக்களிடம் இத்திட்டம் குறித்த விளம்பரப்படுத்தி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மின்கலம் அமைக்க 25 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.


இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் பிரதமரின் சூரிய மின் திட்டத்திற்கு மத்திய அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு மின்வாரியமும் ஒப்புதல் தர வேண்டும். அதன்படி உடனுக்குடன் ஒப்புதல் வழங்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.


SOURCE :Kaalaimani.com 

Similar News