மே மாதத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2.51 கோடி பேருக்கு வேலை - அசாதாரண சாதனை படைத்த பிரதமரின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்!

மே மாதத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2.51 கோடி பேருக்கு வேலை - அசாதாரண சாதனை படைத்த பிரதமரின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்!

Update: 2020-06-10 08:51 GMT

நடப்பு நிதியாண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு இதுவரை இல்லாத அளவில் ரூ.1,01,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக அதிக அளவில் ஒதுக்கப்பட்ட நிதி இதுவே.

2020-21 ஆம் நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ரூ.31,493 கோடி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது, இது நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகையைவைிட 50 சதவீதம் அதிகமாகும்.

இதுவரை 60.80 கோடி மனித வேலை நாட்கள் இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன. 6.69 கோடி நபர்களுக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2.51 கோடி பேருக்கு வேலை தரப்பட்டுள்ளது. இது கடந்தஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 73 விழுக்காடு கூடுதலாகும்.

நடப்பு நிதியாண்டில், இத்திட்டத்தின் கீழ் மொத்தம் பத்து லட்சம் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

Similar News