பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை பதிவு 27% அதிகரிப்பு!
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை பதிவுகள் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட கடந்த எட்டு ஆண்டுகளில் 56.80 கோடி விவசாயிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.23.22 கோடிக்கும் மேற்பட்ட விவசாய விண்ணப்பதாரர்கள் உரிமை கோரல்களை பெற்றுள்ளனர். இந்த காலகட்டத்தில் சுமார் ரூபாய் 31,139 கோடி விவசாயிகள் தங்கள் பங்காக செலுத்தியுள்ளனர்.
இதில் ரூபாய் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 977 கோடிக்கு மேல் உரிமை கோரிக்கைகள் அவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் செலுத்தும் ஒவ்வொரு நூறு ரூபாய் பிரீமியத்துக்கும் அவர்களுக்கு சுமார் 500 இழப்பீட்டு தொகையாக கிடைத்துள்ளது. பிரதமரின் பயிர்காப்பீடு திட்டம் தேவை அடிப்படையிலான திட்டமாகும். இது மாநிலங்கள் மற்றும் விவசாயிகளின் தன்னார்வ அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
2021 -22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் விவசாயிகளின் விண்ணப்பங்கள் எண்ணிக்கை முறையே 33.4% மற்றும் 41% அதிகரித்துள்ளது. மேலும் 2023- 24 ஆம் ஆண்டில் இத் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளின் எண்ணிக்கையில் இதுவரை 27 சதவீதம் அதிகரித்துள்ளது.உண்மையிலும் 2023- 24 ஆம் நிதி ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட மொத்த விவசாயிகளில் 42 சதவீதம் பேர் கடன் பெறாத விவசாயிகள் ஆவர். பிரீமியத்தின் அடிப்படையில் உலக அளவில் மூன்றாவது பெரிய காப்பீட்டு திட்டமான பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் 2016- இல் தொடங்கப்பட்டது. எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் பயிரிழப்பு அல்லது சேதத்தில் இருந்து விவசாயிகளை இது பாதுகாக்கிறது.
SOURCE :Kaalaimani.com