3 வருடம் ஆகியும் சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்காத காரணம் என்ன?

By :  G Pradeep
Update: 2025-10-12 08:20 GMT

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக படித்து முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்டு கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழை அச்சிடுவதற்கு கூட பணம் இல்லாத நிலையில் சென்னை பல்கலைக்கழகம் உள்ளது. 

இதனால் அங்கு படித்த மாணவர்கள் தங்களுடைய உயர் கல்வி படிப்பதற்கும் முடியாமல் வேலைக்கு சேர்வதற்கும் முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியால் முக்கியமான செலவுகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் பல்கலைக்கழகத்தின் வரவு செலவு குறித்த திட்டத்தை ஆய்வு செய்து அதில் அத்தியாவசியமற்ற சில செலவுகளை ரத்து செய்தது.

 மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவது மட்டுமல்லாமல் பிற முக்கியமான பணிகள் கூட பல்கலைக்கழகத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை செய்யும் பொழுது பல்கலைக்கழகத்தின் சார்பாக ஒவ்வொரு செமஸ்டரிலும் 5,50000 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. 

தற்பொழுது நிலுவையில் இருக்கும் சான்றிதழ்களை வழங்கும் பணிகள் மேற்கொண்டு வருவதாகவும், இப்பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 118 இணைப்பு கல்லூரிகளும், 37 தன்னாட்சிக் கல்லூரிகளும் இயங்கி வருவதால் சற்று காலதாமதம் ஆகிறது என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News