கோவிலில் உள்ள குளியலறையில் இருந்து 3 ரகசிய கேமராக்கள் பறிமுதல்!
கோவிலில் அமைந்துள்ள குளியலறையில் இருந்த மூன்று ரகசிய கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்தவாணிக்கன்பட்டியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் குளியலறையில் பொருத்தப்பட்டிருந்த 3 ரகசிய கேமராக்களை போலீஸார் பறிமுதல் செய்தது. ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களிடையே, இந்த ஒரு செய்தி தற்போது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு வரை இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை என்றும் அந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்கள்.
பௌர்ணமி தினங்களிலும், தமிழ் மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களிலும் தென்மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் சித்தவாணிக்கன்பட்டியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலின் குளியலறை மற்றும் கழிவறைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து புகார் வந்ததாக போலீஸார் விசாரணையில் தெரிவித்தனர்.
இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் பேரில், விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் இளவரசு, தனது குழுவினருடன் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, பெண்களுக்கான குளியலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கேமராக்களைக் கைப்பற்றினர். "எந்தவொரு ரெக்கார்டருடனும் இணைக்கப்படாத கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளன. எனவே பீதியடையத் தேவையில்லை" என்று போலீசார் தெரிவித்தனர். கோவில் பூசாரி முருகன் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசாரின் இந்த நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
Input & Image courtesy: The Hindu