3 இந்து கோவிலில் மாட்டிறைச்சி பைகள்: இந்துக்கள் போராட்டம்!
தொடர்ச்சியாக மூன்று மாட்டிறைச்சி பைகள் தொங்க விட்டதை அடுத்து இந்துக்கள் போராட்டம்.
வங்காளத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலை, 3 இந்து கோவில்கள் மற்றும் ஒரு வீட்டின் கதவுகளில் மாட்டிறைச்சி பாக்கெட்டுகளை மர்ம நபர்கள் தொங்கவிட்டனர். வங்கதேசத்தின் லால்மோனிர்ஹாட் மாவட்டத்தில் உள்ள ஹதிபந்தா உபாசிலாவில் உள்ள கெண்டுகுரி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் இதன் காரணமாக இந்துக்கள் தற்பொழுது போராட்டம் நடத்தி வருகிறார்கள். Opindia வெளியிட்டுள்ள செய்தி அறிக்கைகள் படி, மாட்டிறைச்சி கொண்ட பாலித்தீன் பைகள் 3 கோயில்கள், அதாவது மோனிந்திரநாத் பர்மன் என்ற இந்துவின் வீட்டு வாசலில் மாட்டிறைச்சி பொட்டலத்தை மர்மநபர்கள் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும், அப்பகுதியில் உள்ள இந்துக்கள் ஹதிபந்தா போலீசில் 4 புகார்களை அளித்தனர். மேலும் ஸ்ரீ ராதா கோவிந்த கோவிலில் நடந்த அவமதிப்பு செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்கள் போராட்டம் நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று பாதிக்கப்பட்ட இந்துக்கள் உறுதியளித்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக இந்து சமூகத்தினருக்கு போலீசார் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. "சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவார்கள்" என்று காவல்துறை அதிகாரி எர்ஷாதுல் ஆலம் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து உத்ஜபான் பரிஷத் தலைவர் திலீப் குமா சிங் கூறுகையில், 3 கோவில்கள் மற்றும் ஒரு வீட்டின் கதவுகளில் பெரிய பாக்கெட்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்துள்ளனர் என்றார். அனைத்து இந்துக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் பங்களாதேஷ் அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Input & Image courtesy: Opindia