தமிழகத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு பெண் சக்தி விருது: யார் அவர்கள்?

தமிழகத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு பெண் சக்தி விருது, சர்வதேச பெண்கள் தினத்தில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-09 01:47 GMT

பல்வேறு துறைகளில் தற்போது பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். மேலும் அத்தகைய துறைகளில் சிறப்பாக செயல்படும் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதுகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக 'நாரி சக்தி புரஸ்கார்' என்று அழைக்கப்படும் 'பெண் சக்தி' விருது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விருது குறிப்பாக சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி வழங்கி வருகிறார். 


அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பெண் சக்தி விருதினை தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் கைப்பற்றி உள்ளார்கள். அவர்கள் குறித்து தகவல்கள் இதோ தமிழகத்தை சேர்ந்த எம்பிராய்டரி கைவினைஞர்களான ஜெயமுத்து, தேஜம்மா ஆகியோருக்கு 2020-ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருதும், சென்னையை சேர்ந்த மனநல மருத்துவரும், ஆராய்ச்சியாளருமான டாக்டர் தாரா ரங்கசாமிக்கு 2021-ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருதும் தற்பொழுது வழங்கப்பட்டு உள்ளது.


மேலும் இவர்களில் ஜெயமுத்து, தேஜம்மா ஆகியோர் நீலகிரியை சேர்ந்த இவர்கள் தங்களுடைய பள்ளி நாட்களில் இருந்து தோடா எம்பிராய்டரி கொண்ட சால்வைகள் மற்றும் ஆடைகளை உருவாக்கி வருவதாகவும் கூறுகிறார்கள். எனவே தமிழகத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பெண் சக்தி விருது பெறுவது தமிழகத்திற்கு மிகப்பெரிய விஷயம் தான். மேலும் பெண் சக்தி பேர் விருதுகளை பெறும் சாதனையாளர்கள் உடன் நேற்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பாராட்டி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Input & image courtesy: Maalaimalar

Tags:    

Similar News