ரூ.3,000 இல் ஒரு வருட செல்லுபடியாகும் FASTag வருடாந்திர பாஸை வெளியிட்டார் நிதின் கட்கரி!

Update: 2025-06-18 15:47 GMT

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி இன்று ஜூன் 18 வணிக ரீதியான தனியார் வாகனங்களுக்கான புதிய ஃபாஸ்டேக் அடிப்படையிலான ரூ.3,000 விலையில் வருடாந்திர பாஸை அறிவித்தார் 

இந்த பாஸ் ஆகஸ்ட் 15 முதல் கிடைக்கும் மேலும் 200 நெடுஞ்சாலை பயணங்கள் அல்லது ஒரு வருடம் எது முதலில் வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளார் மேலும் இந்த வருடாந்திர பாஸ் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைந்த பயணத்தை செயல்படுத்தும் என நிதின் கட்கரி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதோடு வாகன ஓட்டிகளுக்கு நீண்டகாலமாக நிலவும் கவலையாக இருக்கும் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் பிரச்சினையை சமாளிக்க இந்த முயற்சி உதவும் என்று அமைச்சர் கூறியுள்ளார் 

Tags:    

Similar News