டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு கொரோனா தொற்று - சனிக்கிழமை முதல் அப்பகுதிக்கு சீல்.!

டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு கொரோனா தொற்று - சனிக்கிழமை முதல் அப்பகுதிக்கு சீல்.!

Update: 2020-04-19 06:34 GMT

டெல்லியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியான ஜஹாங்கிர்புரியில் 31 உறுப்பினர்கள் கொண்ட ஒரு பெரிய கூட்டுக் குடும்பம் ஒரு பெரிய கட்டிடத்தில் தனித்தனி போர்ஷன்களில் வசித்து வருகின்றனர்.

இந்த குடும்பத்தில் இருந்த வயதான பெண்மணி ஒருவர் இந்த மாத தொடக்கத்தில் கொரோனா நோய் காரணமாக இறந்துவிட்டார். அவர் சவுதியில் இருந்து வந்த உறவினர் ஒருவரைப் பார்க்கப்ப்போய் தொற்றிக் கொண்டதாக தெரிகிறது. இறந்தவரிடம் தொடர்பு கொண்ட அனைவரையும் டெல்லி சுகாதார துறையினர் பரிசோதித்தனர்.

சோதனையில் அவர்களிடம் எந்த அறிகுறியும் ஆரம்பத்தில் தெரியவில்லை. என்றாலும் அவர்கள் வசித்து வந்த ஜஹாங்கிர்புரியின் சி-பிளாக் ஏப்ரல் 10 ஆம் தேதி சீல் வைக்கப்பட்டு, அனைவரையும் எச்சரிக்கையுடன், தனிமையை பின்பற்ற கூறப்பட்டனர்.

ஆனால் அவர்கள் மீண்டும் ஒருவருக்கொருவர் மிகவும் சகஜமாக முன்பு போலவே நெருங்கி பழகினர். இந்த நிலையில் அவர்களில் சிலருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இந்த நிலையில், சுகாதார துறையினர் மீண்டும் வந்து அவர்களை சென்ற வெள்ளிக் கிழமை சோதித்துப் பார்த்தனர்.

அப்போது அவர்களில் 26 பேருக்கு தொற்றுக்கான பாசிட்டிவ் இருப்பது தெரிய வந்தது. இவர்களில் சிலர் குழந்தைகள் என கூறப்படுகிறது. மேலும் சனிக்கிழமை செய்த சோதனையில் மேலும் ஐவருக்கு உறுதி செய்யப்பட்டதால் அந்த பகுதி ஹாட்ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

Similar News