அமேதியில் தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்ட காங்கிரஸ்- ஸ்மிருதி இரானி!

அமேதியில் தேர்தலுக்கு முன்பே தோல்வியை காங்கிரஸ் ஒப்பு கொண்டு விட்டது என்று ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-04 14:24 GMT

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடாததன் மூலம் தேர்தலுக்கு முன்பே தோல்வியை காங்கிரஸ் ஒப்புக்கொண்டு விட்டது என்று மத்திய அமைச்சர் இறுதி இரானி தெரிவித்தார். உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது .தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற ராகுல் காந்தி கடந்த 2019 தேர்தலில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.

தேர்தலில் கேரளத்தில் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி அங்கிருந்து மக்களவைக்கு தேர்வானார் .இந்த முறை ராகுல் அமேதியில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதிக்கு மாறிவிட்டார். பாஜக சார்பில் அமேதியில் மீண்டும் போட்டியிடும் ஸ்மிருதி இராணி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது :-

ராகுல் குடும்பத்தில் இருந்து அமேதியில் இந்த முறை யாரும் போட்டியிடவில்லை என்பதன் மூலம் இங்கு தோல்வியடைந்து விடுவோம் என்பதை காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பே ஒப்புக்கொண்டுள்ளது என்றார். காங்கிரஸ் சார்பில் ராகுலின் நம்பிக்கைக்குரியதாக கருதப்படும் கே. எல்.ஷர்மா அமேதியில் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு அமைதியில் வெற்றி அடைவோம் என்று தெரிந்தால் அவர்கள் இந்த தொகுதியில் போட்டியிடாமல் இருக்க மாட்டார்கள்.

தேர்தல் களம் காங்கிரசுக்கு சாதகமானதாக இல்லை என்பதால் தான் வேறு நபரை நிறுத்தியுள்ளார்கள். அமேதியில் நான் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. அமேதியில் நிராகரிக்கப்பட்டவர் வயநாட்டுக்குச் சென்றார். இப்போது ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுவதாக மனுதாக்கல் செய்துள்ளார் .வயநாட்டில் தேர்தல் முடிந்து விட்டது. அங்கு முடிவு ராகுலுக்கு சாதகமாக இருக்காது என்று பிரதமர் மோடியும் கூறியுள்ளார். இந்த நிலையில் தான் ராகுல் ரேபரேலியிலும் போட்டியிடுகிறார் என்றார்.


SOURCE :Dinamani

Similar News