பா.ஜனதா இட ஒதுக்கீட்டை பறிக்காது மற்றவர்கள் பறிக்கவும் அனுமதிக்காது- அமித்ஷா!

பா.ஜனதா இட ஒதுக்கீட்டை பறிக்காது மற்றவர்கள் பறிக்கவும் அனுமதிக்காது என்று அமித்ஷா கூறினார்.

Update: 2024-05-06 08:03 GMT

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தர பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச்,  எடாவா, மைன்புரி ஆகிய மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

எதிர்க்கட்சிகள் பிற்படுத்தப்பட்ட மக்களை புறக்கணித்தனர். பிரதமர் மோடி பதவிக்கு வந்த பிறகு தான் அவர்களுக்கு உரிமைகள் அளிக்கப்பட்டன. பா.ஜனதாவுக்கு 400 தொகுதிகள் கிடைத்தால் இட ஒதுக்கீட்டை நீக்கிவிடும் என்று ராகுல் காந்தி சொல்கிறார். கடந்த இரண்டு தடவையும் பா.ஜனதாவுக்கு முழு பெரும்பான்மை இருந்தது. இருப்பினும் பிரதமர் மோடி இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தான் இருந்தார். எனவே எஸ்.சி.எஸ்.டி பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை பா ஜனதா ரத்து செய்யாது.

மற்றவர்கள் ரத்து செய்யவும் அனுமதிக்காது. இது மோடியின் உத்தரவாதம். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2029 ஆம் ஆண்டு வரை ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்குவது உள்ளிட்ட நலத்திட்டங்கள் நீடிக்கும். சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் யாதவ் குடும்பத்தினர் மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். சமாஜ்வாடி ஆட்சியில் குண்டுகள் வெடித்தன. ஆனால் பா.ஜ.க ஆட்சியில் குண்டுகள் தயாரிக்கப்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

உத்திர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறு.ம் நடந்து முடிந்த இரண்டாவது கட்ட வாக்கு பதிவில் பாஜக 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். காங்கிரஸ் சமாஜ்வாடி கட்சிகள் இன்னும் கணக்கையே தொடங்கவில்லை. மொத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 தொகுதிக்கு மேல் வெற்றி கிடைக்கும் .

இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் யார் பிரதமர் என்று சொல்ல முடியுமா? மோடியைத் தவிர வேறு யாராவது நாட்டை உறுதியாக நிர்வகிக்க முடியுமா? ஒரு பக்கம் கோடையில் ஓய்வெடுக்க தாய்லாந்து செல்லும் ராகுல் காந்தி இருக்கிறார். மறுபக்கம் 23 ஆண்டுகளாக எல்லையில் ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடும் மோடி இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News