காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்.. தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சியா..
காஷ்மீரில் கடந்த சில மாதங்களாகவே பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறைவாக தான் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்ற பிறகு உச்சி மாநாடு காஷ்மீரில் நடைபெற்று இருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை நோக்கமாக வைத்து பல்வேறு அந்நிய சக்திகள் தேர்தலை தடுக்கும் பல்வேறு முயற்சிகளை ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த வகையில் காஷ்மீரில் தற்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்தி தாக்குதலில் விமானப்படை வீரர்கள் நான்கு பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இன்று விமானப்படை வீரர்கள் சிலர் வாகனத்தில் வழக்கமாக செல்லும் கான்வாய் வழியாக சென்று கொண்டிருந்தனர். இப்பொழுது ஏற்கனவே மறைந்து இருந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 4 விமானப்படை வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. தகவலறிந்த காஷ்மீர் ராஷ்ட்ரீய ரைபில்ஸ் படை வீரர்கள் அங்கு பாதுகாப்புபணியில் ஈடுபட்டு பயங்கரவாதிகளை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்த விமானப்படை வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Input & Image courtesy:News