4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை!! பாகிஸ்தானுக்கு சரியான பதில் அடி கொடுத்த பர்வதனேனி ஹரிஷ்!!
ஆயுத மோதல்கள் நடக்கும் சமயத்தில் பெண்கள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐநா பாதுகாப்பு அவையில் கடந்த 2000 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த தீர்மானம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பெண்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி நடந்த விவாதத்தில் பாகிஸ்தான் பிரதிநிதி இந்தியாவிற்கு எதிராக பேசினார்.
ஜம்மு காஷ்மீரை சுட்டிக்காட்டி இந்தியாவிற்கு எதிராக ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதியான சைமா சலீமின் பேசியதை தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐநாவுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாக தெரிகிறது.
பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் தங்களுடைய பங்கானது ஈடு இணை இல்லாதது. ஆனால் தன்னுடைய நாட்டு மக்கள் மீது குண்டுகளை வீசி இன வேறுபாடுகளை உருவாக்கி இன படுகொலை செய்யும் நாடு சில தவறான கருத்துக்களை பரப்பி உலகை வேறு ஒரு செயல் திருப்புகிறது.
ஏற்கனவே பாகிஸ்தானில் கடந்த 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆபரேஷன் சர்ச்லைட் என்கின்ற ராணுவ தாக்குதலில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நான்கு லட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டனர். இத்தகைய பாகிஸ்தான் நாடு எத்தகைய பிரச்சாரத்தை மேற்கொள்கிறது என்று உலகம் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது என்று கூறி சரியான பதிலடி கொடுத்தார்.