சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்: ஆடி அமாவாசை திருவிழா!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா.

Update: 2022-07-23 02:23 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதை ஒட்டி தற்போது நான்கு நாட்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 4 பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில். தமிழ் மாதந்தோறும் அமாவாசை பவுர்ணமி சிவராத்திரி பிரதோஷம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும். 


பூஜைகளுக்கு 2 முதல் நான்கு நாட்கள் வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதிக்க படுவார்கள். குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட பிரதான அமாவாசை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து மலையேறி சாமி தரிசனம் செய்வர். எனவே இந்த வருடத்தில் ஆடி அமாவாசை திருவிழா வருகின்ற ஜூலை இருபத்தி எட்டாம் தேதி நடைபெற உள்ளது. 


எனவே நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தினத்தன்று நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சித்தர்கள் பெருமை வாய்ந்த சதுரகிரி மலைக்கு வருகை தந்தார். பக்தர்களுக்கு உண்டான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து அரசுத் துறை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

Input & Image courtesy: Samayam News

Tags:    

Similar News