வெங்கடாசலபதி கோவில் புதுப்பிக்கப்படுமா? பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அறநிலையத்துறை!

வெங்கடாசலபதி கோவில் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகிறார்கள்.

Update: 2022-11-02 02:52 GMT

வெங்கடாஜலபதி கோவில் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பெரம்பலூர் மாவட்டம் ஆலந்தூர் தாலுகாவில் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கோவில்தான் வெங்கடாசலபதி கோவில். இந்த கோவில் இந்த சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. இந்த கோவிலில் தற்போது காலை, மாலை ஆகிய இரு வேலைகளிலும் பூஜை நடைபெற்று வருகிறது. தினமும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்யும் பெருமை வாய்ந்த கோவிலாகவே இது திகழ்கிறது.


இப்படிப்பட்ட கோவில்களில் கருங்கற்களால் ஆன பழமையான கட்டிடம் பல்வேறு இடங்களில் செய்தமடைந்து, கற்கள் சரிந்து வருகிறது. மேலும் கோவில் பராமரிப்பு இன்றி வளாகம் முழுவதும் செடி,கொடிகள் என வளர்ந்து காட்சியளிக்கிறது. இந்த கோவில் கட்டிடத்திலும் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் இந்த கோவில் எப்போது வேண்டுமானாலும் முழுமையாக இடிந்து விடலாம் என்ற நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த கோவிலை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கையை வைத்து இருக்கிறார்கள்.


ஆனால் தற்போது வரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இது பற்றி இது ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். மேலும் இந்த கோவில் கி.பி பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட கற்கோவில் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்கள் தற்போது வரையில் புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது. பல்வேறு பழமை வாய்ந்த இந்த கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Input& Image courtesy: Thanthi News

Tags:    

Similar News