மத்திய அரசின் சூரிய சக்தி மின்சாரம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரம் விண்ணப்பம்!
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரம் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகத்திலிருந்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.;
சூரிய சக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்றவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்ய மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது .அந்த வகையில் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரம் என்ற திட்டத்திற்கு நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ரூபாய் 75 ஆயிரம் கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் இத்திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழ் அடுத்த ஓராண்டுக்குள் 25 லட்சம் வீடுகளுக்கு சூரிய சக்தி மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் இதுவரை 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் .ஆனால் இதில் ஐந்து சதவீதம் பேருக்கு மட்டுமே சூரிய சக்தி மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
சூரிய சக்திய மின் உற்பத்திக்கான சோலார் தகடுகள் விற்பனை செய்யும் 100க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் சென்னை, கோவையில் மட்டுமே உள்ளனர். இதனால் பிற மாவட்டங்களில் இணைப்பு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சோலார் தகடு விற்பனை செய்யும் விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.