45 ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் கூத்தை மக்கள் உணர்ந்துவிட்டனர்! நிவாரண பொருட்களை வழங்கிய பின் அண்ணாமலையின் பேச்சு!

Update: 2023-12-07 00:49 GMT

சென்னை கடந்த மூன்று நாட்களாக மிக்ஜம் புயலால் பெரும் துயரத்தை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

நிவாரண பொருட்களை வழங்கிய பின்பு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், புயல் கரையை கடந்த சென்னையில் இன்று 30 சதவீத பகுதிகள் இயல்பு நிலமைக்கு திரும்பாமல் உள்ளது. பாஜகவினர் கடந்த மூன்று நாட்களாகவே களப்பணியில் இருந்து வருகின்றனர். ஆனால் திமுகவின் எம்பிகளோ சென்னையில் மீட்பு பணியில் இல்லாமல் பார்லிமென்ட்டில் "கோ மூத்திர" என தனது கட்சிக்காக பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

தற்போது இந்த சூழ்நிலை மூலம் 45 ஆண்டுகளாக சென்னையில் நடந்து வரும் கூத்துகளை மக்கள் உணர்ந்துவிட்டனர். அதிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்றும் முடிவெடுத்து விட்டனர். திமுக எம்பி கனிமொழி அதிமுக செய்த தவறுகளை சரி செய்வதற்கே ரூபாய் 4000 கோடி செலவானது என்று கூறியிருந்தார். மொத்தமும் பொய்யாக மாறி பொய் மட்டும் சொல்லி எத்தனை நாட்கள் இவர்கள் வண்டி ஓட்டுவார்கள்! இந்த அவலங்கள் அனைத்திற்கும் சீக்கிரம் விடிவு காலம் பிறக்கும் என பேசியுள்ளார். 

ஆதாரம்: தினமலர்

Similar News