460 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் அழிப்பு: மத்திய அமைச்சகத்தின் முயற்சி
மத்திய அரசாங்கம் தற்போது பல்வேறு நடவடிக்கைகளை போதைப் பொருளுக்கு எதிராக எடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் மூன்றாவது முறையாக அமைந்த பிறகு போதைப் பொருளை சமுதாயத்தில் இருந்த அழிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்ட செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசாங்கம் தூய்மை இந்தியா சிறப்பு இயக்கம் மூலமாக போதை பொருட்களை ஒலிக்கும் செயலை ஈடுபட்டு வருகிறது. ரூ. 460 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தற்போது ஒழிக்கப்பட்டு இருக்கிறது.
நிதி அமைச்சகத்தின் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் சிறப்பு இயக்கம் 4.0ன் ஒரு பகுதியாகவும் சட்டவிரோத பொருட்களின் சட்டவிரோத இறக்குமதிக்கு எதிரான போராட்டத்தின் தொடர்ச்சியாகவும், தில்லி சுங்க ஆணையரகம், சுங்க (விமான நிலையம் மற்றும் பொது) ஆணையரகம் கூட்டாக மொத்தம் 49 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள், சுமார் 73 கிலோ போதை மருந்துகள் ஹெராயின் கோகோயின் கஞ்சா சரஸ் போன்றவை குட்கா பான் மசாலா மற்றும் சிகரெட்டுகள் அழிக்கப்பட்டன.
அழிக்கப்பட்ட மருந்துகள் சிகரெட்டுகள் போன்றவற்றின் மதிப்பு சுமார் ரூ 460 கோடியாகும். சுங்கச் சட்டம், என்டிபிஎஸ் சட்டம் மற்றும் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தை மீறியதற்காக இந்த பொருட்கள் சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.
Input & Image courtesy: News