5 ரூபாய்க்கு சத்தான உணவு!! டெல்லி அரசு தொடங்கிய அடல் உணவகம்!!

By :  G Pradeep
Update: 2025-12-26 03:20 GMT

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி அரசு 'அடல் உணவகம்' திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில், வெறும் 5 ரூபாய்க்கு சத்தான மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படுகிறது.

ஏழை எளிய மக்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களின் பசியைப் போக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பருப்பு, சாதம், சப்பாத்தி, ஒரு காய்கறி பொறியல், ஊறுகாய் ஆகியவை அடங்கிய முழுமையான உணவு வழங்கப்படுகிறது.

மதிய உணவு காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை விநியோகிக்கப்படும். இரவு உணவு மாலை 6:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை கிடைக்கும்.

முதற்கட்டமாக 45 இடங்களில் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஏழை மக்கள் பசியை போக்கி உணவு அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில நாட்களில் மீதமுள்ள 55 இடங்கள் உட்பட மொத்தம் 100 உணவகங்கள் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. 

Tags:    

Similar News