5 ஆண்டுகளில் இரட்டிப்பான ஜிஎஸ்டி வசூல்:2023-2024 விட 9.4% அதிக வசூல்!

Update: 2025-07-01 03:04 GMT

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவைகள் வரி அமலுக்கு வந்தது ஜி எஸ் டி அவளுக்கு வந்து தற்போது 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த ஐந்து ஆண்டு ஜிஎஸ்டியின் வசூல் இரட்டிப்பாகி 22.08 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருவதால் நாட்டின் நிதி நிலவரம் வலுவடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது அதன்படி ஜிஎஸ்டி அமலுக்கு வந்த காலகட்டத்தில் பதிவு செய்த பரிதாரர்களின் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்ததாகவும் இது தற்பொழுது நடப்பு ஆண்டில் 1.51 கோடியை கடந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

அதுமட்டுமின்றி கடந்த நிதியாண்டான 2024-2025 இல் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் ரூபாய் 22.08 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது இதுவே 2020-2021 இல் ரூபாய் 11.37 லட்சம் கோடியாக இருந்துள்ளது இறுதியாக 2023-2024 நிதியாண்டில் வசூலான ஜிஎஸ்டி வசூலை 2024-2025 இல் வசூலான ஜிஎஸ்டி வசூலோடு ஒப்பிடும்பொழுது 9.4% ஜிஎஸ்டி வசூல் 2024-2025 நிதியாண்டில் அதிகரித்துள்ளது 

Tags:    

Similar News