வீட்டில் பதுக்கி வைத்திருந்த பழங்கால சிலைகள் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!

வீட்டில் பதிக்க வைத்திருந்த ஐந்து பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளது, விசாரணை நடைபெற்று வருகிறது.

Update: 2022-11-04 03:31 GMT

நெல்லை அருகே ராஜா வள்ளி புரத்தில் ஒரு வீட்டில் பழங்கால சிலைகள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் டி.ஜி.பி ஜெயந்த் முரளிக்கு ரகசிய விசாரணையின் பெயரில் அங்கு சென்று விசாரணை நடத்தினார். இதை அடுத்து நெல்லை சரகு சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சகாயம் ஆகியோர் அங்கு சென்று விசாரணையை மேற்கொண்டனர்.


அந்த ஊரைச் சேர்ந்த செல்ல பாண்டியன் மகன் நடராஜன் என்பவரது வீட்டில் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சிந்தனையின் போது அவரது வீட்டில் ஐந்து பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. 24 சென்டிமீட்டர் உயரமுள்ள விநாயகர் சிலை, சிறிய விநாயகர் சிலை, சுவரில் மாட்டும் விநாயகர் சிலை, வடமாநிலங்களில் வழிபடக்கூடிய எட்டு மீட்டர் உயரம் கொண்ட தாரா அம்மன் சிலை.


சிலுவையில் அறியப்பட்ட இயேசுநாதர் சிலை எனும் ஐந்து சிலைகள் பதிவு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஐந்து சிலைகளையும் டெல்லியில் உள்ள தொல்பொருள் ஆய்வகத்திற்கு அனுப்பி அது எந்த காலத்தை சேர்ந்த சிலைகள்? இதன் மதிப்பு என்ன? என்பது குறித்து தற்பொழுது போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இது கடத்திக் கொண்டு வரப்பட்ட என்று கோணத்தில் தற்பொழுது வழக்கை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News