தமிழகத்தில் அதிகரிக்கும் மதுபான போதை: பாட்டிலுடன் பள்ளிக்கு சென்ற மாணவர்?

போதையில் மது பாட்டிலுடன் பள்ளிக்கு சென்ற மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-24 08:20 GMT

ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் மது பாட்டில்களுடன் அரசு பள்ளிக்கு சென்ற ஐந்து மாணவர்கள் தற்பொழுது ஐந்து நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக  முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்து இருக்கிறார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் முதல் 12 ஆம் வகுப்பு வரை 600 மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.


இதனையடுத்து கடந்த 19ஆம் தேதி 11-ம் வகுப்பு படிக்கும் ஐந்து மாணவர்கள் மதுபோதையில் கையில் மது பாட்டிலுடன் வகுப்பறைக்கு வந்துள்ளனர். இதனை பார்த்து மற்ற மாணவ மாணவியர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அவர்கள் செயல்காக அவர்களை கண்டித்த ஆசிரியர்கள் மது போதையில் இருந்த மாணவர்கள் தகராறு செய்துள்ளார்கள். இதனால் தலைமை ஆசிரியர் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார்.


இந்நிலையில் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகர் முருகன் நடந்ததை விசாரித்தார். பின்பு மாணவர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மாணவர்கள் இச்சையில் காரணமாக சகமாணவர்களுக்கிடையே அதிர்ச்சி உருவாக்கியுள்ளது. இது போன்ற செயல்கள் தடுக்க பள்ளி, கல்லூரி செல்லும் வழியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையில் உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News