50 மெகாவாட் குஜ்ராய் சூரிய மின் நிலையம் - உ.பியில் தொடங்கும் எஸ்.ஜே.வி.என் நிறுவனம்!
உத்திர பிரதேசத்தில் எஸ்.ஜே வி.என் நிறுவனம் சூரிய மின்சக்தி நிலையத்தை தொடங்கியுள்ளது.;
எஸ்.ஜே.வி.என் நிறுவனம் உத்தரபிரதேசத்தின் கான்பூர் தேஹாட்டில் அதன் 50 மெகாவாட் குஜ்ராய் சூரிய மின் நிலையத்தின் வெற்றிகரமான வணிக செயல்பாட்டை தொடங்கியுள்ளது.இந்த சாதனையின் மூலம் எஸ்.என்.வி.ஏ நிறுவனத்தின் மொத்த நிறுவப்பட்ட மின் திறன் 227 மெகா வாட்டாக உள்ளது .தற்போது 10 மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
குஜராத் மாநிலம் அதன் புதுப்பிக்கத்தக்க பிரிவான எஸ்.ஜே.வி என் பசுமை ஆற்றல் நிறுவனம் மூலம் ரூபாய் 281 கோடியும் மின் உற்பத்தி மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 32 கோடியும் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .இவ்விடத்தின் மூலம் முதல் ஆண்டில் 107 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்யப்படும் .மேலும் 25 ஆண்டுகளில் 247 மில்லியன் யூனிட் கள் ஒட்டுமொத்த மின் உற்பத்தி செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சாதனையை பகிர்ந்து கொண்ட தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கீதா கபூர் நாட்டின் புதை படிவ எரிபொருள் அல்லாத அடிப்படையிலான எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கவும் 2070 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைய உதவும் எஸ்.ஜே.வி. என் உறுதிபூண்டுள்ளது என்றார் .எஸ் ஜே.வி.என் பசுமை ஆற்றல் நிறுவனம் சமீப காலங்களில் பல புதுப்பிக்கத்தக்கத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளது .இதனால் 2030ம் ஆண்டில் 25 ஜிகாவாட் மற்றும் 2040ஆம் ஆண்டில் 50 ஜிகா வாட் நிறுவப்பட்ட திறனை அடைய வேண்டும் என்று அதன் தொலைநோக்கை அடைவதற்கான பாதையை அமைத்துள்ளது.
SOURCE :kaalaimani.com