51,000 மேற்பட்ட இளைஞர்களின் நியமன கடிதத்தை வழங்கிய பிரதமர் மோடி:இளைஞர்கள் தான் பிரகாசமான எதிர்காலத்தின் மூலதனம்!

Update: 2025-07-12 09:37 GMT

ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் அரசுத்துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காணொளி மூலம் நியமன கடிதங்களை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் இளைஞர்கள் தான் நாட்டின் மூலதனம். அவர்கள் தான் நாட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் என உரையாற்றியுள்ளார் 


அதாவது நமது நாடு மூன்றாவது பெரிய பொருளாதரமாக மாறுவதை நோக்கி நகர்வதை கூறிய பிரதமர் கடந்த 11 ஆண்டுகளில் நாடு ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது இன்று நடைபெறுவதை போன்ற வேலைவாய்ப்பு மேளாக்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் சிலர் நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிக்கின்றனர் சிலர் நாட்டை பாதுகாக்கும் பணியில் உள்ளார்கள் சிலரோ நாட்டின் நிதியை வலுப்படுத்தும் பணியில் உள்ளனர் பல தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துகிறார்கள் 


இப்படி இளைஞர்கள் வெவ்வேறு துறையில் தங்கள் உழைப்பின் மூலம் நாட்டின் வளர்ச்சியை உயர்த்தி வருகின்றனர் அதனால் அவர்கள் அனைவரின் நோக்கமும் ஒன்றுதான் சமீபத்தில் ஐந்து நாடுகளுக்கு பயணம் சென்ற பொழுது அங்கு இந்தியாவின் இளைஞர்கள் சக்தியின் எதிரொளியை கேட்க முடிந்தது அந்த நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் நிச்சயமாக நமது இளைஞர்களுக்கு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பயனளிக்கும் என கூறியுள்ளார்



Tags:    

Similar News