ரூ.5,376 கோடி செலவில் மூன்று திட்டங்களை தமிழ்நாட்டிற்கு இறக்கிய மத்திய அரசு!

Update: 2025-04-04 15:50 GMT

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் ஆறு மாநிலங்களில் 1,025 கி.மீ நீளமுள்ள 27 கடலோர தேசிய நெடுஞ்சாலை (NH) திட்டங்கள் தற்போது கட்டுமானத்தில் இருப்பதாகவும் ரூ.65,111 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்

2026-27 நிதியாண்டில் படிப்படியாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்தத் திட்டங்கள் இந்தியாவின் விரிவான கடற்கரையோரத்தில் இணைப்பு,தளவாடத் திறன் மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன குறிப்பாக இந்த ஆறு மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம்,கோவா,குஜராத்,கேரளா,மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை அடங்கும்

இதில் தமிழ்நாடில் மட்டும்128 கி.மீ நீளமுள்ள மூன்று திட்டங்கள் ரூ.5,376 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது மேலும்,பிரதான கடற்கரையுடன் இணைப்பை மேம்படுத்துவதற்காக 890 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்

Tags:    

Similar News