கோவாவில் சர்வதேச திரைப்படம் விழா: பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியா!

சர்வதேச திரைப்பட விழாவில் 40 சதவீத படங்கள் பெண்களால் இயக்கப்பட்டவை அல்லது பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டவை.

Update: 2022-11-22 02:40 GMT

கோவா தலைநகர் பனார்ஜியின் 53வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்த விழாவை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் நடத்துகிறது. இது 9 நாள் நடைபெறும் திரைப்பட திருவிழா ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திருவிழாவை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார். மேலும் இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.


மேலும் திரைப்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர் தொடக்க விழாவின் போது திரை நட்சத்திரம் பலருக்கு வாழ்நாள் திரைப்பட சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவை தொடங்கி வைப்பதற்கு முன்னதாக அனுராதாக்கூர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,இது ஒரு ஆசிரியர் ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட திருவிழா என்பதை குறிப்பிட்டார். இந்த திருவிழாவில் 53 வது பதிப்பு தொடங்குகிறது. புகழ்பெற்ற தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கலைஞர்கள் ஆகியோருக்கு இது ஒரு சிறந்த களமாக மாற்ற அரசாங்கம் விரும்புகிறது.


உள்ளடக்க உருவாக்கம் இணையதள தயாரிப்பு தயாரிப்பு இயக்கம் படப்பிடிப்பு என எதுவாக இருந்தாலும் இந்தியாவில் உலகளாவிய உள்ளடக்க மையமாக மாற்ற விரும்புகிறோம். இந்த திரைப்பட விழாவில் காட்டப்படுகின்ற படங்களில் கிட்டத்தட்ட 40 சதவீத படங்கள் போட்டிக்கு உள்ள பிரிவுகளில் பெண்களால் இயக்கப்பட்டவை அல்லது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவை. திரைப்பட உலகில் தற்பொழுது பெண்களும் தங்களுடைய திறமையை நிரூபிக்க தொடங்கி விட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News