6வது சுற்று பேச்சு வார்த்தைக்கு தயாராகும் இந்திய மற்றும் அமெரிக்கா வர்த்தக குழு!!
சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற இந்திய யுஏஇ உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று நிபுணர்களிடம் பேசினார். அப்போது இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் நட்பு நாடுகள் என்றும், இந்த இரண்டு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தை சரியான பாதையில் செல்வதாக கூறினார்.
அது மட்டுமல்லாமல் இந்தியா அதிக அளவில் நம்பிக்கை கொண்டுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது என்றும், மிக விரைவில் இரண்டு நாடுகளுக்கும் பயன்படும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என்று கூறினார்.
ஏற்கனவே இது குறித்து இரண்டு நாடுகளுக்கு இடையில் 5 சுற்று பேச்சு வார்த்தை முடிந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் நாள் ஆறாம் சுற்று பேச்சுவார்த்தை நடக்க இருந்த நிலையில் அமெரிக்க அதிபர் இந்தியாவின் இறக்குமதி பொருள்களுக்கு 50% வரிவிதித்ததால் இந்த பேச்சு வார்த்தை நடக்காமல் போனது.
இந்நிலையில் அமெரிக்காவின் வர்த்தக குழு தற்பொழுது டெல்லிக்கு வந்துள்ளதால் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்படும். இரு நாடுகளுக்கு இடையிலான ஆறாவது சுற்று பேச்சு வார்த்தை குறித்த செய்தி விரைவில் வரும் என்றும், அதன் மூலம் அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற இரண்டு தரப்பில் உள்ள நாடுகளுக்கும் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.