6 நாட்களில் 1000 இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றம்!

Update: 2025-04-28 16:26 GMT

காஷ்மீர் பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர் இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியாவை வசித்து வரும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது

இந்தியாவிற்குள் மருத்துவ விசாவில் வந்த பாகிஸ்தானியர்களுக்கு நாளைக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி உத்திரவிடப்பட்டுள்ளது மற்ற பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற அனுப்பப்பட்ட கால அவகாசமும் முடிவடைந்தது இந்த நிலையில் கடந்த ஆறு நாட்களில் பாகிஸ்தானில் இருந்து ஆயிரம் இந்தியர்கள் வாகா எல்லையை கடந்துள்ளதாகவும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களில் 800 பேர் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது

Tags:    

Similar News