62 ஆண்டுகளுக்கு முன்பு திருடப் பட்ட நடராஜர் சிலை: அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு!

62 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை கோவிலில் திருடப்பட்ட நடராஜர் சிலை, அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப் பட்டது.

Update: 2022-09-07 03:05 GMT

தஞ்சை மாவட்டத்தில் வேதம்புரீஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 62 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கோவில் சிலை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நடராஜர் சிலையானது சுமார் 200 ஆண்டுகள் பழமையான சிலையாகவும் அறியப்படுகின்றது. இதுதான் தற்போது அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவேதிக்குடி கண்டியூரில் உள்ள ஸ்ரீ அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.


இந்த கோவில் ஆனது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த கோவிலில் உள்ள நடராஜர் சிலை 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோவிலில் திருநாவுக்கரசர், திருநாவு சம்பந்தர் போன்ற பல்வேறு முனிவர்கள் தரிசித்து இறைவனின் பெருமையை பாடிய கோவில்களும் ஒன்றாக இந்த கோவில் விளங்குகிறது. பழங்காலத்தில் இருந்தே பல்வேறு பெருமைகளை பெற்ற கோவிலாகவும் இது திகழ்கிறது. இந்த கோவிலில் 62 ஆண்டுகளுக்கு முன்பு புகுந்த மரபு நபர்களால் அங்கு பக்தர்களுக்காக வைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலையை திருடி சென்றார்கள்.


எனவே இது தொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்த சேதுராயன் மகன் வெங்கடாசலம் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. மேலும் கும்பகோணம் தலைமையிலான விசாரணை குழு இந்த புகார் உண்மைதான் என்பதை உறுதி செய்தது. பிறகு சிலையை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. அதை வைத்து தற்போது இந்து பிரெஞ்சு நிறுவனத்திடம் நடராஜர் சிலையின் புகைப்படங்களை சோதனை செய்தது. அப்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் திருடு போன நடராஜர் சிலை இருப்பதை குழுவினர் கண்டடைந்தனர். அவற்றை மீட்டு மீண்டும் தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.

Input & Image courtesy: Dinamani News

Tags:    

Similar News