ரோஹிங்கியா அகதிகள் 69 பேர்: அந்தமானில் தஞ்சம் புகுந்தனர்!

ரோஹிங்கியா அகதிகள் 69 பேர்: அந்தமானில் தற்பொழுது தஞ்சம் புகுந்து இருக்கிறார்கள்.

Update: 2023-02-15 01:31 GMT

வங்காள தேசத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் தற்பொழுது சிறிய குழுவாக பிரிந்து அந்தமானை வந்தடைந்து இருக்கிறார்கள். 69 பேர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வங்காளத்தில் இருந்து இந்தோனேசியா நோக்கி படகில் புறப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் ரோஹிங்கியா அகதிகள் படைக்கு நேற்று காலை இந்தியாவின் அந்தமான் தீவுக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்தார்கள்.


மோசமான வா வானிலை மற்றும் கடல் சீற்றமாக காணப்பட்டதன் காரணமாக படகின் எரிபொருள் தீர்ந்தது. தொடர்ந்து அந்த படகில் அவர்கள் அந்தமான் நிக்கோபார் மாவட்டத்தில் கரை ஒதுங்கி இருக்கிறார்கள். வங்களாதேஷத்தில் இருந்து தற்பொழுது அவர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இது குறித்த தகவல் கிடைத்ததும் கடலோர காவல் படகினர் மற்றும் போலீசார் பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு சென்று வந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் படகில் இருந்தவர்களை மீட்டு பத்திரமாக அவர்களுக்கு உதவிகளை செய்தார்கள்.


அதில் சுமார் 19 ஆண்கள், 22 பெண்கள் மற்றும் 28 சிறுவர்கள் உட்பட 69 பேர் பயணம் செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு உணவு தண்ணீர் மற்றும் போதுமான மருந்துகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து மத்தியில் உள்துறை அமைச்சகம் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது விசாரிக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News