ஜி7 உச்சி மாநாட்டில் இந்திய கலாச்சார பரிசுகளை வழங்கி உலக தலைவர்களை பிரமிக்க வைத்த பிரதமர் மோடி!
கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல பரிசுகளை உலக தலைவர்களுக்கு வழங்கியுள்ளார்
அதாவது கன்னட பிரதமர் மார்க் கார்னிக்கு கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட பித்தளை போதி மரத்தை பிரதமர் பரிசாக வழங்கியுள்ளார் மேலும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு பண்டைய கால மெழுகு நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டோக்ரா நந்தி சிற்பத்தையும் மெக்சிகன் அதிபர் கிளாடியா ஷீன்பாம் பார்டோவுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியினர் வரையும் வார்லி ஓவியத்தையும் தென் கொரியா அதிபர் லீ ஜே-மியுங்கிற்கு பீகாரில் தோன்றிய மதுபானி கலை ஓவியத்தை பரிசாக வழங்கியுள்ளார்
மேலும் தென்னாப்பிரிக்க அதிபருக்கு பித்தளை குதிரை பிரேசில் அதிபருக்கு மூங்கில் படகு ஆஸ்திரேலியா பிரதமருக்கு வெள்ளிப்பானை ஜெர்மன் அதிபருக்கு கோனார் சக்கரத்தின் மணற்கல் கனடா கவர்னருக்கு வெள்ளி பர்ஸ் ஆல்பர்ட்டாவின் பிரதமருக்கு கருங்காலி மரப்பெட்டி என இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒவ்வொரு பரிசையும் வழங்கியுள்ளார்