7-வது இந்திய மொபைல் மாநாடு.. 6G-யிலும் கால் பதிக்க இருக்கும் இந்தியா..

Update: 2023-10-29 00:52 GMT

நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 '5 ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை’ பிரதமர் வழங்குகிறார். 100 ‘5ஜி ஆய்வகங்கள் முன்முயற்சி’ சமூகபொருளாதாரத் துறைகளில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க 5ஜி பயன்பாடுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, நாட்டில் 6G சுற்றுச்சூழல் அமைப்பைக் கட்டமைப்பதற்கான ஒரு முக்கிய படியாகும். இந்திய மொபைல் மாநாடு 2023 முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாட்டாளர், உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் 7 வது இந்திய மொபைல் மாநாடு 2023-ஐ பிரதமர்  நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 '5ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை பிரதமர் வழங்குகிறார். 100 ‘5 ஜி ஆய்வகங்கள் முன்முயற்சி', இந்தியாவின் தனித்துவமான தேவைகள், உலகளாவிய தேவைகள் ஆகிய இரண்டையும் பூர்த்தி செய்யும் 5 ஜி பயன்பாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் 5ஜி தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய வாய்ப்புகளை அடைவதற்கான ஒரு முயற்சியாகும். இந்த தனித்துவமான முயற்சி கல்வி, வேளாண்மை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து போன்ற பல்வேறு சமூக பொருளாதாரத் துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்கும் மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் நாட்டை முன்னணியில் கொண்டு செல்லும்.


நாட்டில் 6G-யில் கல்வி மற்றும் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் இந்த முன்முயற்சி ஒரு முக்கிய படியாகும். மிக முக்கியமாக, இந்த முன்முயற்சி தேசிய பாதுகாப்புக்கு முக்கியமான உள்நாட்டு தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஒரு படியாகும். இந்தியா மொபைல் மாநாடு ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்ப அமைப்பாகும். இது 2023 அக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெறும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News