70 லட்சம் ரூபாய் மோசடி செய்து ஆசிரியரை ஏமாற்றிய திமுக பிரமுகர்!!

Update: 2023-11-27 01:20 GMT

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஐயம்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் இவர்! சின்னமனூர் கருங்காட்டன்குளம் பகுதியில் தகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மனைவியும் ஆவார். லதா ஆசிரியராக பணிபுரியும் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் யோகா பயிற்சி வகுப்பு குறித்த விளம்பரம் செய்வதற்காக கம்பம் பகுதியை சேர்ந்த சின்னகந்தன் என்பவரின் மகன் ராமகிருஷ்ணன் சென்ற பொழுதுதான் ஆசிரியர் லதா இவருக்கு அறிமுகமாகியுள்ளார். 

மேலும் ராமகிருஷ்ணன் தேனி மாவட்டம் கராத்தே ராமகிருஷ்ணன் என்ற அறியப்பட்ட திமுக பிரமுகர். அதோடு கம்பம் வடக்கு நகர திமுக துணைச் செயலாளர் மற்றும் தேர்வு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் போன்ற பதவிகளை பெற்றவர்.

இந்நிலையில் தனக்கு அரசியல் மற்றும் அரசின் உயிர் அதிகாரிகளை நன்கு தெரியும் என்று கூறி ஆசிரியர் லதாவிடம் பல்வேறு தவணைகளாக 70 லட்சம் ரூபாயை வாங்கி லதாவின் கணவர் மற்றும் அவரது தம்பிக்கு அரசு வேலை வாங்கி தந்ததாகவும் லதாவின் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் சேர்த்து வாங்கி தருவதாகவும் கூறி மோசடி செய்துள்ளார்.

அதோடு கம்பம் நான்கு வழி சாலையில் லதாவிற்கு சொந்தமான 63 சென்ட் நிலத்தையும் அதிக விலைக்கு விற்று தருகிறேன் என்று கூறி ராமகிருஷ்ணன் தனது பெயருக்கு பத்திரம் முடித்துள்ளதாகவும் வேறு நபருக்கு அந்த இடத்தை விற்பனை செய்ததோடு ஆசிரியர் லதாவின் வீட்டை 25 லட்சம் ரூபாய்க்கு தனியார் பைனான்ஸிடம் அடமானம் வைத்து கடன் பெற்று கொண்டுள்ளார். இந்த மோசடி குறித்து ஆசிரியர் கேட்ட பொழுது பணத்தை திருப்பி கொடுக்க மறுத்த ராமகிருஷ்ணன் அவரை அவதூராகவும் பேசியுள்ளார். 

இதனால் ஆசிரியர் லதா தேனி மாவட்ட எஸ்பி பிரபுவின் உமேஷ் டோங்கரேயிடம் புகார் அளித்தது அடுத்து திமுக பிரமுக ராமகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேனி சிறையில் கைது செய்து அடைத்தனர். 

Source : Puthiyathalaimurai 

Similar News