அரசுப்பள்ளிகளில் 71% மாற்றுத் திறனாளிகளுக்காக தயார்: மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் மொத்தமாக 71 % அரசுப் பள்ளிகள் மாற்றுத் திறனாளிகளுக்காக தயார் நிலையில் உள்ளது.;

Update: 2022-06-07 23:49 GMT

இந்தியாவில் தற்போது மொத்தமுள்ள 11,68,292 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 8,33,703 பள்ளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 71% அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி பள்ளிகள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏதுவாக உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பதாக 2015ஆம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் "அணுகக்கூடிய இந்தியா" என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. குறிப்பாக சுற்றுச்சூழல், போக்குவரத்து, தகவல் தொடர்பு அமைப்புகள் ஆகியவற்றின் அனைவரும் பயன்படுத்தும் விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 


இந்த திட்டத்தின் கீழ் 2022 ஜூன் மாதத்திற்குள் 50 சதவீத நகரங்களில் உள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசு கட்டிடங்களை தணிக்கை செய்த அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்ற வேண்டும் என்றும் கூறியது. எனவே முக்கிய நகரங்களில் உள்ள 50 சதவீத அரசு கட்டிடங்களை இவ்வாறு தணிக்கை செய்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாற்றுவதே இதன் நோக்கம். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை, 71% அரசுப் பள்ளிகள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் விதமாக மாற்றப்பட்டுளளதாக சமூக நீதி துறை அமைச்சகம் வெளியிட்ட தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெளிநாட்டில் இதுவரை 37 சர்வதேச விமான நிலையங்கள் 50வெளிநாட்டு விமான நிலையங்கள் அனைவரும் பயன்படுத்தும் மாற்றப்பட்டுள்ளது. அணுகத்தக்க இந்தியா திட்டத்தின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை, இலக்கு காலத்தை நீட்டிப்பது தொடர்பாக வரும் 24ம் தேதி இது தொடர்பான கூட்டம் ஒன்றை நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News