72 குடும்பங்கள், 72 பெண் குழந்தைகள், 7200 பேருக்கு உணவு - பிரதமரின் 72'வது பிறந்தநாளில் பம்பரமாக சுழன்று உதவிகள் வழங்கிய SG.சூர்யா

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளில் சுகன்யா சம்ரிதித் திட்டத்தின் கீழ் 72 ஏழை பெண் குழந்தைகளுக்கு ₹. 1,000 வைப்பு தொகையுடன் வங்கி கணக்கு துவங்கி வைத்த எஸ்.ஜே.சூர்யா.

Update: 2022-09-18 03:27 GMT

இந்திய முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72வது பிறந்தநாள் விழாவை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் மயிலாப்பூர் பகுதியில் 72 குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை BJP மாநில செயலாளர் SG. சூர்யா அவர்கள் வழங்கினார். மேலும் பா.ஜ.க தென் சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியின் கீழ் 10 வயது உட்பட்ட 72 ஏழை பெண் குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுடைய பெயரில் சுகன்யா சம்ரிதித் திட்டத்தின் கீழ் ₹ 1000 வைப்பு தொகையாக செலுத்தி, வங்கி கணக்குகள் தொடங்கி வைக்கப்பட்டன. 


வங்கி கணக்குகளை துவங்கி வைத்தற்கான பாஸ்புக்களையும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் வழங்கினார். பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் 72 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் எஸ்.ஜே சூர்யா அவர்களின் சார்பில் இந்த நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து நபர்களுக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது. மதிய உணவை பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் எஸ்.ஜே சூர்யா அவர்கள் தன்னுடைய கையினால் பரிமாறினார்.



இது மட்டுமல்லாது சென்னை கிழக்கு மாவட்டம் நங்கநல்லூர் மாவட்டத்தில் பா.ஜ.க கொடியை ஏற்றி, இனிப்புகளை வழங்கி, புதிய உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சிக்குள் வரவேற்று மிக சிறப்பாக பிரதமரின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 72 வெவ்வேறு இடங்களில் நமோ மீல்ஸ் என்ற பெயரில் ஏழை எளிய மக்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்க்கலாம் என்பது இந்த நிகழ்ச்சியில் தெள்ளத் தெளிவாகிறது.

Input & Image courtesy: Twitter Source 

Tags:    

Similar News