75வது சுதந்திர தின விழா ! பிரதமர் மோடி உரை : ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் பிரதமரின் கதி சக்தி திட்டம் செயல்படுத்தப்படும் !

பிரதமரின் கதி சக்தி திட்டம் மூலம் நாட்டில் தொழில்துறை மேலாண்மை, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

Update: 2021-08-15 04:17 GMT

டெல்லி: 75வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றியபின் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் பேசியாவது: நாட்டு மக்கள், அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். நாட்டை உருவாக்கியவர்கள், வளர்ச்சியடைய செய்த மகாத்மா காந்தி, அம்பேத்கார்,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்  என அனைவரையும் இந்நேரத்தில் நினைவு கூர்கிறேன்.

சூரிய ஒளி மின்சாரம் விவசாயிகளுக்கு  கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தால் விவசாய நிலப்பரப்பு சுருங்கி வருகிறது. 70 சதவீத கிராமங்களுக்கு இணைய வசதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் பிரதமரின் கதி சக்தி எனும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமரின் கதி சக்தி திட்டம் மூலம் நாட்டில் தொழில்துறை மேலாண்மை, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஏழைகளுக்கு 100 சதவீதம் வீட்டு வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ வசதி உள்ளிட்ட திட்டங்கள் மக்களை வேகமாக சென்றடைய வேண்டும். ஒரு வினாடியை கூட வீணடிக்காமல் உழைக்க தொடங்க வேண்டும். இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம் என்பது பெருமைக்குரியது. கொரோனா மனித குலத்திற்கு மிகப்பெரும் சவாலாக மாறியது.

ஒரே மாதிரியான வளர்ச்சிக்காக நகரம், கிராமமின்றி நாடு முழுவதும் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் ஒரு பகுதி கூட பின்தங்கிய பகுதியாக இருக்க கூடாது என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறோம். மின் இணைப்பு, ஓய்வூதியம், கேஸ் இணைப்பு கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறோம். விரைவில் அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி, அனைவருக்கும் வங்கிக் கணக்கு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Image Source : DNA India

Dinakaran

Tags:    

Similar News