'ஜல் ஜீவன்' திட்டத்தில் மோடி அரசின் சாதனை!
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் இதுவரை 78.58 சதவீத கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை தொடங்கியது. 2024 ஆம் ஆண்டு முடிவதற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் வழி இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவது தான் இத்திட்டத்தின் நோக்கம் .ஜல்ஜீவன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது .அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஜல்ஜீவன் திட்டம் கிராமப்புறம்- நகர்ப்புறம் இடையிலான பாகுபாட்டை களையக்கூடிய திட்டம். பொது சுகாதாரத்தை மேம்படுத்தும். கடந்த ஆறாம் தேதி நிலவரப்படி 15 கோடியே 19 லட்சம் கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த கிராமப்புற வீடுகளில் 78.58% ஆகும் திட்டம்.இத்திட்டம் தொடங்கப்பட்டபோது வெறும் பதினேழு சதவீத வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. அதாவது திட்டம் தொடங்கப்பட்டதற்கு பிறகு 11 கோடியே 95 லட்சம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கோவா, ஹரியானா ,தெலுங்கானா இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 100% கிராமப்புற குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது .இது தவிர ஒன்பது லட்சத்து 29 ஆயிரம் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கும் குடிநீர் இணைப்பு மூலம் தூய்மையான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்ய 24 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இதுவரை 54 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.