8வது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டதா... சுமார் 375 ஆண்டுகள் ஆச்சா இதை உறுதிப்படுத்த..
தமிழகத்திற்கு கீழே இருந்து ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா வரை லெமுரியா கண்டம் இருந்ததாக சொல்கின்றனர். குறிப்பாக தமிழ் இலக்கிய பாடங்களின் போது, நாம் லெமூரியா கண்டம் பற்றி கேள்விப்பட்டு இருப்போம். அதாவது தமிழ் இனம் இந்த கண்டத்தில் இருந்து தோன்றியதாகவும் அதன் பின்னர் தான் தமிழகம் உருவானதாக இருப்பதாகவும் கூறியிருப்பார்கள். அந்த பகுதி நாளிடவில் கடல் சூழப்பட்டதன் காரணமாக லெமூரியா கண்டம் இருந்ததற்கான அடையாளங்கள் தடங்கள் இருப்பதாகவும் தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது, விஞ்ஞானிகளும் கூறுகிறார்கள். ஆனால் அதை முழுவதும் உண்மை என்று நிரூபிக்க முடியவில்லை.
அதே போல இப்போது எட்டாவது கூட ஒரு கண்டம் இருந்திருக்க வாய்ப்புள்ளது. உலகின் எட்டாவது கண்டத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் சுமார் 375 ஆண்டுகள் எடுத்தனர் என்ற செய்தி உலகம் முழுவதும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளம் என்று மிகப்பெரிய ஊடக அமைப்பு காரணமாக உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரு அறிவியல் ரீதியான கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டாலும், அதை மூளை முடுக்கிலும் உள்ள அனைத்து மனிதர்களிடம் சென்றடையும் வகையில் தற்போது தொழில்நுட்பம் வலுவடைந்து இருக்கிறது.
உலகில் எட்டாவது கண்டமாக இருந்த ஒன்று இவ்வளவு நாட்கள் முழுவதும் கண்ணுக்கு தெரியாத வகையில் மறைந்திருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அதைச் சுற்றி மர்மங்கள் உள்ளன. புவியியலாளர்கள் பசிபிக் பெருங்கடலுக்குள் ஆழமான நிலத்தின் பெரும்பகுதியைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. உலகின் பெரிய பெருங்கடலாக திகழும் பசிபிக் பெருங்கடலின் அடியில் இந்த ஒரு கண்டம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News