அயோதியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி தலைமையில் 8 ரயில்கள் மற்றும் 15000 கோடியில் திட்ட பணிகள் தொடக்கம்!

அயோதியில் மறு சீரமைக்கப்பட்ட ரயில் நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி கோவை பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் உட்பட எட்டு புதிய ரயில்களை தொடங்கி வைத்தார். மேலும் 15 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டம் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-12-31 03:45 GMT

உத்திரபிரதேசம் அயோதியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அங்குள்ள அயோத்தியில் ரயில் நிலையம் ரூபாய் 240 கோடியில் மறு சீரமைக்கப்பட்டுள்ளது .சர்வதேச தரத்தில் அமைந்துள்ள அந்த ரயில் நிலைய திறப்பு விழா மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத் திறப்பு விழா ஆகியவை நேற்று நடைபெற்றது .இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று புதுடில்லியில் இருந்து அயோதிக்கு விமானத்தில் வந்தார். அங்கிருந்து கார் மூலம் அயோத்தி  ரயில் நிலையத்துக்கு வந்தார் .வழியில் அவருக்கு இருபுறமும் திரண்டு நின்ற மக்கள் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தனர் .


இதை தொடர்ந்து அயோத்தி தாம் ரயில் நிலையத்துக்குச் சென்ற பிரதமர் மோடி மறுசீரமைப்பு செய்யப்பட்ட அந்த ரயில் நிலையத்தை திறந்து வைத்து அதனை சுற்றி பார்த்தார் .பின்னர் அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை கேட்டு அறிந்தார். இதை அடுத்து அங்கு நடைபெற்ற விழாவில் தர்பங்கா- அயோத்தி ஆனந்த் விகார் இடையேயும் மால்டா நகர் பெங்களூர் இடையேயும் இரண்டு புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கோடி அசைத்து தொடங்கி வைத்தார் .


தொடர்ந்து கோவை பெங்களூர் ஸ்ரீ மாதா வைஷ்ணா தேவி கத்ரா - புதுடில்லி , அமிர்தசரஸ் டெல்லி, மங்களூரு - மட்கான் , ஜல்னா - மும்பை ஆறு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதை அடுத்த அம்ரித் பாரத் ரயிலில் ஏறிய பிரதமர் மோடி அதிலிருந்து பயணிகளிடம் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஸ்ணவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதை அடுத்து பிரம்மாண்டமான வீணை நிறுவப்பட்டுள்ள லதா மங்கேஷ்கர் சவுக்கை பிரதமர் மோடி பார்வையிட்டார்.


அப்போது லதா மங்கேஷ்கர் பாடிய பக்தி பாடல் இசைக்கப்பட்டது. இதை அடுத்து உத்திர பிரதேசத்தில் ரூபாய் 15,700 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். புதியதாக கட்டப்பட்ட விமான நிலையத்தையும் திறந்து வைத்தார். அயோதியில் பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் வருகிற 22ஆம் தேதி அயோதியில் ராமர் பிரதிஷ்டை விழாவுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.


SOURCE :DAILY THANTHI

Similar News