விற்பனைக்கு உள்ள 83 மருந்துகள் தர மற்றவை: மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!

இந்தியாவில் தற்பொழுது விற்பனையில் உள்ள 83 மருந்துகள் தரம் மற்றவை என்று மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல் அறிவித்து இருக்கிறது.

Update: 2022-12-18 07:33 GMT

நாட்டின் விற்பனையில் உள்ள 83 மருந்துகள் தர மற்றவை என்று மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்ததாக தற்பொழுது செய்திகள் வெளியாகி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு தேவையான மருந்து பொருட்களை குறைவான விலையில், தரமான முறையில் மருந்துகள் வழங்குவதை உறுதி செய்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தகம் மூலம் மலிவான விலையில் மருந்துகள் விற்கப்பட்டு, இதுவரை ஏழை, நடுத்தர மக்களின் பணம் ரூ.13,000 கோடி வரை சேமிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் மருந்தகத்தின் கீழ்த்தரமான மற்றும் நியாய விலையில் தான் மக்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது சட்டத்திற்கு புறம்பாக நாட்டில் ஏழை எளிய மக்களை பாதிக்கும் பல்வேறு மருந்துகள் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக நாட்டில் விற்கப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. அதேபோல் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பரில் சுமார் 1487 மருந்தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.


அவற்றில் உயர் ரத்த அழுத்தம் காய்ச்சல் சளி, கால்சியம் ஜீரண மண்டல பாதிப்பு போன்றவற்ற போன்ற பாதிப்புகளுக்கு பயன் படுத்தப்படும் 83 மருந்துகள் தர மற்றவை என்று கண்டறியப் பட்டிருக்கிறது. அதன் விவரங்களை மத்திய தர கட்டுப்பாட்டு வாரியம் cdsco.gov.in என்று இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உறுதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News