விற்பனை மந்தமான ஆவின் பால்: பொங்கலுக்கு 100, 200 மி.லி அளவுகளில் நெய் தயாரிக்க திட்டம்!

பொங்கல் பண்டிகை ஒட்டி 100 மில்லி லிட்டர் அளவுகளில் ஆவின் நெய் தயாரிக்கத் திட்டம்.

Update: 2022-12-03 05:28 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 100, 200 மில்லி லிட்டர் அளவுகளில் ஆவின் நெய் தயாரிப்பதற்கு ஆவின் நிர்வாகம் தற்பொழுது திட்டமிட்டு வருகிறது. தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையமாக ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் பால் விற்பனைக்குப் பிறகு மீதம் உள்ள 10 லட்சம் லிட்டர் பாலில் இருந்து பால் பவுடர், வெண்ணை தயாரிக்கப்படுகிறது.


வெண்ணையை உருக்கி நெய் தயாரிக்கப்படுகிறது. அதன்படி தினசரி ஐந்து டன் அளவில் நெய் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக விற்பனை மந்தமானது. அதிக அளவில் பால் பாக்கெட் தேங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை காலத்தில் 100 மில்லி லிட்டர் மற்றும் 200 மில்லி லிட்டர் என சிறிய அளவில் ஆவின் நெய் தயாரித்து அதிக அளவில் விற்பனை செய்ய நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டு இருக்கிறது.


இது குறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குனர் சுப்பையன் செய்தி அறிக்கையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 100 மில்லி லிட்டர் ஆவினை அதிக அளவில் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டபடி இருப்பதாக கூறுகிறார். மேலும் இது தவிர பண்டிகை காலங்களில் பல்வேறு ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை இலக்கை அடையவும் திட்டமிட்ட பட்டியிருப்பதாக ஆவின் நிர்வாகம் முடிவை மேற்கொண்டு இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: The Hindu News

Tags:    

Similar News