பத்து ரூபாய் நாணயங்களைப் பெற மறுக்கும் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சுயேட்சை வேட்பாளர் செய்த செயல்!

பத்து ரூபாய் நாணயங்களைப் பல இடங்களில் பொதுமக்கள் வாங்க மறுக்கின்றனர். இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த சுயேட்சை வேட்பாளர் செய்த செயல் பற்றி காண்போம்.;

Update: 2024-03-26 09:04 GMT
பத்து ரூபாய் நாணயங்களைப் பெற மறுக்கும் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சுயேட்சை வேட்பாளர் செய்த செயல்!

புதுச்சேரியில் மனுதாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர் வைப்புத் தொகையை 10 ரூபாய் நாணயங்களாக செலுத்தினார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த ராமதாஸ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு தாக்கல் செய்ய வந்தார். அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் குலோத்துங்கனிடம் தனது வேட்பு மனுவை அளித்தார். தேர்தல் வைப்புத் தொகையான ரூபாய் 12,500-ஐ செலுத்த பத்து ரூபாய் நாணயங்களை தட்டில் பரப்பி எடுத்து வந்தார் .

அதை அதிகாரிகளிடம் வழங்க அவர்கள் சரி பார்த்து பெற்றுக் கொண்டனர்.  10 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் பெற மறுப்பதை அடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் வைப்புத் தொகையை 10 ரூபாய் நாணயங்களாக வழங்கியதாக தெரிவித்தார். திருக்காஞ்சியைச் சேர்ந்த எஸ் கொளஞ்சியப்பன், வில்லியனூரைச் சேர்ந்த 74 வயது முதியவர் ஜார்ஜ் உட்பட நான்கு பேர் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட வேட்புமனு அளித்தனர். 


SOURCE :Dinaboomi

Similar News