ஆதார் கார்டில் போட்டோவை மாற்ற செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன?

ஆதார் கார்டில் உள்ள போட்டோவை மாற்றுவதற்கு செய்ய வேண்டிய முக்கிய வழிமுறைகள்.

Update: 2022-04-20 01:23 GMT

தற்போது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகி விட்டது ஆதார் கார்டு. மேலும் இந்த ஒரு முக்கிய ஆவணங்களாக இருந்தாலும் அவற்றில் ஆதார் கார்டு முதன்மை இடம்பெறுகின்றது. பான் கார்டு முதல் பேங்க் அக்கவுண்ட் வரை அனைத்தும் ஆதாருடன் இணைக்க கட்டாயப்படுத்துவது அரசாங்கம். ஆதார் கார்டில் நம்முடைய பயோமெட்ரிக்ஸின் அங்கீகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் முக்கிய தனிப்பட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் நாம் குறிப்பிட்டுள்ள தனிப்பட்ட தகவல்களை ஆன்லைனிலேயே அப்டேட் செய்யும் வகையில் UIDAI-ன் ஆன்லைன் போர்ட்டல் உதவுகிறது.


உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் உங்கள் தனிப்பட்ட விவரங்களில் ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பினால், நீங்கள் UIDAI-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லலாம். அதில் உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகைப்படம் மற்றும் இமெயில் Id தொடர்பான தகவல்களை நீங்கள் அப்டேட் செய்து கொள்ளலாம். ஆதார் கார்டில் உங்கள் போட்டோவை மாற்ற நீங்கள் ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும். ஆதார் கார்டில் இருக்கும் உங்கள் போட்டோவை வேறு ஒரு நல்ல போட்டோவாக மாற்றுவதற்காக நீங்கள் அப்டேட் செய்ய விரும்பினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.


ஆதார் கார்டிலிருக்கும் போட்டோவை மாற்ற உதவும் வழிமுறைகள், முதலில் UIDAI-வின் அதிகாரபூர்வ வெப்சைட்டான uidai.gov.in-விற்கு செல்லவும். ஆதார் என்ரோல்மென்ட் ஃபார்மை டவுன்லோட் செய்யவும். மேலும் அந்த ஃபார்மில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து கொள்ளவும். ஆதார் என்ரோல்மென்ட் சென்டருக்கு சென்று இந்த ஃபார்மை சமர்ப்பிக்கவும்.அங்கே உங்களது புதிய புகைப்படத்தை எடுத்து கொள்ளலாம். இதற்கு GSTயுடன் சேர்த்து ரூ.100 செலுத்த வேண்டும். உங்கள் விவரங்களை அங்கீகரிக்க நீங்கள் பயோமெட்ரிக்ஸை வழங்க வேண்டும் நீங்கள் ஒப்புகை சீட்டை பெறுவீர்கள். ஆதார் கார்டில் அப்டேட்டாக அதிகப்பட்சம் 90 நாட்கள் வரை ஆகலாம். 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News