ஆப்கன், பாகிஸ்தான் வர்த்தகம் 50 சதவீதம் உயர்வு ! தாலிபான்களுடன் ரகசிய உறவால் சாத்தியம்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், இந்தியா அந்நாட்டு இடையிலான வர்த்தகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையிலான வர்த்தகம் கடந்த வாரத்தில் மட்டும் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-08-27 02:54 GMT

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், இந்தியா அந்நாட்டு இடையிலான வர்த்தகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையிலான வர்த்தகம் கடந்த வாரத்தில் மட்டும் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் உடனான போக்குவரத்தில் கடும் சிக்கல்கள் நீடித்து வருகுறது. ஆனாலும் வர்த்தகம் அதிரகித்துள்ளதாக பாகிஸ்தான் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்பு கூறியுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் வங்கிகள் மூடப்பட்டிருந்த நிலையிலும் பாகிஸ்தானுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துளளது.

இதற்காக பாகிஸ்தான் வர்த்தகம், தொழில் மற்றும் முதலீட்டு துறையினர் கடந்த 23ம் தேதி ரகசியமாக தாலிபான்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதனால் தாலிபான் தரப்பும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று பாகிஸ்தானை போன்று ஈரானும், ஆப்கானிஸ்தானுடனான எரிவாயு மற்றும் எண்ணெய் ஏற்றுமதி தாலிபான் கைப்பற்றிய பின்னர் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2831467

Tags:    

Similar News