ஆப்கன்: தலிபான்களால் பல்கலைக்கழக மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் !

தலிபான்களால் கைப்பற்றப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Update: 2021-09-07 13:54 GMT

ஆப்கானிஸ்தானில் தற்பொழுது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தலிபான்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதிலும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் இஸ்லாமிய பெண்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார். ஏற்கனவே, ஆப்கானிஸ்தானில் 1990களில் இருந்ததுபோல் தலிபான்கள் கடுமையான சட்டத்திட்டங்களை விதித்து இயல்பை முடக்கக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது. இதனால், லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர். கடந்த முறை தலிபான் ஆட்சியின் போது பெண்களுக்கு சுதந்திரம் எந்தவிதத்திலும் இல்லாமல் இருந்தது. பெண்கள் ஹிஜாப் அணியாமல் வெளியே வரக்கூடாது. பெண்கள் கல்வி கற்கவோ, வேலை செய்யவோ அனுமதிக்கக் கூடாது. சினிமா, எழுத்து உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடக் கூடாது என்பது தலிபான்களின் சட்டமாக இருந்தது. 


அந்த வகையில் தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், வகுப்பின் நடுவே திரை கட்டி மாணவர்கள் ஒருபுறம் மாணவிகள் ஒருபுறம் என தனித்தனியாக அமர வைத்து பாடம் எடுக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் தலிபான்கள் ஆதிக்கம் இல்லாத ஆப்கனில் பெண் கல்வி பெருமளவில் உயர்ந்தது. ஆனால் இந்நிலையில் தற்போது தலிபான்கள் தாமாகவே முன்வந்து இந்த முறை எங்களின் ஆட்சி முன்பு போல் இருக்காது என்று கூறினர். பெண் கல்வியை அனுமதிப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.


இருந்தாலும் தற்பொழுது அவர்கள் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டாலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. தற்பொழுது பல்கலைக்கழக வகுப்பறைகளில் மாணவ, மாணவிகள் தனித்தனியே அமர வைக்கப்பட்டு நடுவில் ஒரு திரையும் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வகுப்புகள் முடிந்ததும் முதலில் பெண்கள் வெளியேற வேண்டும். அதன் பின்னர்தான் மாணவர்கள் வெளியேற வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெண்களுக்கு பெண் ஆசிரியர்களைக் கொண்டே பாடம் எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது. 

Input:Livemint

Image courtesy:livemint




Tags:    

Similar News