ஆப்கன்: ஆட்சி மாற்றம் காரணமாக மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்களா ?
தலிபான்களின் ஆட்சி மாற்றம் காரணமாக தற்போது ஆப்கானிஸ்தான் உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாட்டு சபை பிரதிநிதி கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் முழுவதுமாக தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் புதிய ஆட்சியை அவர்கள் தற்பொழுது அமைத்துள்ளார்கள். இதன் காரணமாக அங்கு வாழும் மக்களுக்கு தேவையான உணவு வசதிகளையும் அவர்களால் செய்து கொடுக்க முடியுமா? மற்றும் மற்ற நாடுகளுடன் அவர்களது மணிக்கு வர்த்தகம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தற்போது வரை ஒரு கேள்விக்குறியாகத்தான் உள்ளது. மேலும் இதன் காரணமாக அங்குள்ள ஆப்கானிய மக்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, ஆப்கன் மக்களுக்கான உணவுப் பொருட்கள் கையிருப்பு இந்த மாதத்துடன் தீர்ந்து விடும் என்று அந்த நாட்டுக்கான ஐ.நா. துணை சிறப்பு பிரதிநிதி ரமிஸ் அலக்பரோவ் எச்சரித்தும் உள்ளார்.
ஆப்கனில் நான்கு கோடி மக்கள் வசிக்கின்றனர். மேலும் அதிகமானோர் தலிபான்கள் ஆட்சியின் காரணமாக வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து உள்ளார்கள். இருந்தாலும் அங்குள்ள மக்களுக்கு ஐ.நா தற்பொழுது உணவுப் பொருட்களில் வழங்கி வருகிறது. மேலும் இது தொடர்பாக ஐ.நா துணை சிறப்பு பிரதிநிதி ரமிஸ் அலக்பரோவ் அவர்கள் கூறுகையில், "ஆப்கனுக்கு உலக உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் இந்த மாதத்துடன் தீர்ந்து விடும்.
அதன் பிறகு ஒரு கோடி பேருக்கு அன்றாடம் ஒருவேளை உணவு கூட கிடைக்காத நிலை ஏற்படும். இவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க குறைந்த பட்சம் 1,500 கோடி ரூபாய் தேவைப்படும். ஆப்கனில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இக்குழந்தைகளுக்கு இனி உணவு கூட கிடைக்காத நிலை உண்டாகும். காபூல் விமான நிலையத்தில் மட்டும் 800 குழந்தைகள் உள்ளனர். உலக நாடுகள் ஆப்கன் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்களை வழங்க முன் வர வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Input:https://www.india.com/news/world/threat-of-a-food-crisis-in-afghanistan-is-anyone-listening-4927700/
Image courtesy:India